·   ·  384 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 5.10.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மிதுனம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். சுப காரியங்கள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

 

துலாம்

முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

நினைத்த காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளை கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

தனுசு

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பினை உருவாக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மீனம்

நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

  • 399
  • More
Comments (0)
Login or Join to comment.