·   ·  174 posts
  •  ·  0 friends

டாட்டாவின் அற்புத அறிவுரை

டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில், வாழ்க்கை, மற்ற கடமைகள் எல்லாவற்றையும் மதிப்பாக உணரும்போது ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்" என்று வாழ்க்கை தத்துவத்தை நண்பருக்கு மென்மையாக புரிய வைத்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

  • 402
  • More
Comments (0)
Login or Join to comment.