·   ·  832 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 8.1.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

பேச்சுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். சமூக பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சேவை நிமித்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரம் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். உயர்நிலை கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

அலுவல் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளில் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் கைகூடிவரும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மகரம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மீனம்

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 711
  • More
Comments (0)
Login or Join to comment.