·   ·  1026 posts
  •  ·  0 friends

அல்வா

நம் தெனாலி ராமன் போல, கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தில் முல்லா நஸ்ருதீன் என்ற சுஃபி ஒருவர் இருந்தார்.

நல்ல புத்திசாலி. தத்துவ ஞானி. அவரைப்பற்றிய நகைச்சுவை கதைகள் பல உண்டு.

ஒருமுறை முல்லா தன் சீடர்களுக்குக் வெளியூர் சென்றார். அவ்வூர் மக்களில் சிலர் அவர்களுக்கு சில்லரையாக நன்கொடை அளித்தனர். மாலையில் ஓய்வு எடுக்க ஒரு காலி சத்திரத்தை சென்று தங்கினர். மக்கள் அளித்த நனகொடை அதிகம் இல்லாததால், அவர்களுக்குள் பிரித்து தருவது கடினம் என்பதால் முல்லா அதை பிரிக்கவில்லை. சீடர்கள் சண்டை பொறுக்காத முல்லா, அவர்களுக்கு ஒரு பாடமளிக்க ஒரு யோசனை கூறினார்.

முல்லா ஒரு சீடனை அனுப்பி, அப்பணத்தில் அல்வா வாங்கி வந்து பிரித்துக் கொள்ள சொன்னார். அந்த அல்வா எல்லோருக்கும் பிரிக்கும் அளவு அதிகமாக இல்லை. எனவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இன்று இரவு தூக்கத்தில் யார் சிறந்த கனவு காண்கிறாரோ அவருக்கே எல்லா அல்வாவும் என்று முடிவு. அல்வா முல்லா கைக்கு வந்தது.

காலையில் எல்லா சீடர்களும் மிக்க ஆவலுடன் தம் கனவுகளை பற்றி சொல்ல துடித்தார்கள். முல்லா எல்லோரையும் முந்திக் கொண்டு சொன்னார், நேற்று இரவு என் கனவில் ஆண்டவர் தோன்றனார். அவருக்கு அந்த அல்வாவை சமர்ப்பித்தேன். என்னை மிகவும் மெச்சி பாராட்டி நீயே எல்லா அல்வாவையும் உண்டு காண்பி என்றார். ஆண்டவர் கட்டளையை மீற முடியுமா, சாப்பிட்டு விட்டேன் என்றார்.

பிறகு என்ன,............... முல்லா தான் சீடர்களுக்கு அல்வா கொடுத்து விட்டாரே!

  • 46
  • More
Comments (0)
Login or Join to comment.