·   ·  244 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 12.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் விரயங்களும் நேரிடும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த மந்த தன்மை விலகும். பயணம் மூலம் சிந்தனைகளில் சில தெளிவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

ரிஷபம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்து பணிகளை முடிப்பீர்கள். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரப் போட்டிகளால் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

மிதுனம்

சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவு பெறும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கடகம்

தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

சிம்மம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். துணைவர் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தடைபட்ட சில பணிகள் முடிவடையும். சுப காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வாகன பழுதுகள் மூலம் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் அலைச்சல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். பழகும் விதங்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் விற்பனைகள் அதிகரிக்கும். பத்திர தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதரிகள் வழியில் சில காரியங்கள் அனுகூலமாக முடியும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

தனுசு

துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நண்பர்கள் வழியில் புரிதல்கள் அதிகரிக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் பற்றிய சிந்தனைகள் உருவாகும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடிவரும். கோபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கும்பம்

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மீனம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வருமானம் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். முதலீடுகள் தொடர்பான செயல்களில் ரகசியம் காக்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

  • 567
  • More
Comments (0)
Login or Join to comment.