·   ·  1472 posts
  •  ·  0 friends

கண்ணாடிக்கு முத்தம்

அமெரிக்க பள்ளி ஒன்றில் பெண்கள் பாத்ரூமில் ஒரு பெண் லிப்ஸ்டிக் போட்டுவிட்டு கண்ணாடியில் முத்தம் கொடுத்தார். உதடுகளின் தடம் கண்ணாடியில் படிந்தது.

அடுத்த நாள் ப்ரின்சிபல் "கண்ணாடிக்கு முத்தம் கொடுக்ககூடாது" என சொல்ல மாணவிகள் எல்லாரும் "அப்படித்தான் கொடுப்போம்" என சொல்லி பாத்ரூம் கண்னாடியை லிப்ஸ்டிக் தடங்களால் நிரப்பினார்கள்

பள்ளி ஜேனிட்டர் மாணவிகளை அழைத்தார். "இப்படி எல்லாம் செய்வதால் கண்ணாடியை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகிறது"

மாணவிகளுக்கு ஒரே சிரிப்பு.

"அதனால் என்ன செய்கிறேன் என பாருங்கள்" என சொல்லிவிட்டு டாய்லட்டை நோக்கி நடந்து, பாத்ரூம் டாய்லெட் மாப்பை (Mop) நீரில் நனைத்து கண்னாடியை துடைத்தார்.

"இனிமேல் தினமும் இந்த பாத்ரூம் கண்ணாடி இந்த மாப்பால் ( Mop ) ஆல் தான் துடைக்கபடும். கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பவர் கொடுத்துக்கலாம்.."

அடுத்த நாள் முதல் பாத்ரூம் கண்ணாடிகள் சுத்தமாக இருந்தன.

  • 64
  • More
Comments (0)
Login or Join to comment.