- · 0 friends
எம லோகம் (கொஞ்சம் பெரிய கதை)
புண்ணிய ஆத்மாக்கள்.. பாவஆத்மாக்கள் என பிரித்து எமதர்மராஜனிடம் விசாரணைக்கு அனுப்பி வைத்து கொண்டு இருந்தார்,சித்ரகுப்தன். .எமனும் அவரவர் செய்த பாவங்களுக்குதக்கபடி தண்டனையை பாவிகளுக்கு வழங்கி கொண்டிருந்தார்….. கிங்கரர்கள் அந்த பாவிகளை அழைத்து போய் தண்டனையை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள் இப்படி மும்முறமாகஇயங்கி கொண்டிருந்தது,எமலோகம்.. சித்ரகுப்தனின் பேரேட்டில் ஒருபக்கம்….மடித்திருந்ததைபார்த்த அவர்…. அந்த பக்கத்தை உன்னிப்பாக,ஆராய் ந்தார். … பூலோகத்தில் ஒரு உயிரை இன்னும் இருபது நிமிடத்தில் எடுக்க வேண்டி இருந்தது……அதை எம தர்ம ராஜனிடம் மெதுமாக காதருகே சென்று சொன்னார் சித்ரகுப்தன் …இன்னும்நான்ஐந்தாறுஆன்மாக்களுக்குதீர்ப்பு சொல்லி விட்டு செல்கிறேன். .என எமன் சொல்ல…. அப்படியல்ல…உடனடியாகஇந்த உயிரை எடுத்தே ஆக வேண்டும் தர்மராஜா…. காரணம்,இன்னும் சில நிமிடங்களில் இந்த ஜீவனுக்கு கல்யாணம் ஆகி விடும்…. அப்படி ஆகிவிட்டால் விதியே தலை கீழாகமாறி விடும்…. இந்த ஜென்மம் இடைப்பட்டது அந்த ஆன்மாவிற்கு.
…அதுவும் அற்பாயுள்……. நாளை அந்த ஆன்மா ஒரு அரசனுக்கு மகனாக பிறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால்மட்டுமல்ல… நான்அவசர பட இன்னொரு காரணமும் உள்ளது தர்மராஜா……என சித்ர குப்தன்சொல்ல….. எம தர்ம ராஜனோ அதையும் சொல்லி விடுங்கள்…நான் இப்போதே செல்கிறேன்…என்றார்…. அந்த ஆன்மாவுக்கு கழுத்தை நீட்டதயாராக இருக்கும் அந்த பெண்ணுக்கு பிறக்கபோகும் பெண் குழந்தைக்கு, இந்த தாலி கட்ட போகும்ஆன்மா,தகப்பன்ஆக கூடாது . .. அப்படி நடந்து விட்டது என்றால் நம் நீதி குலைந்து போய் விடும்….எனவே விரைவாக செயல் படுங்கள்…. போய் அந்த உயிரை எடுங்கள் என்று அவசர படுத்தினார் சித்ரகுப்தன்…கை வேறு பிசைந்து கொண்டு இருந்தார் அவர்…
அவசர படாதே சித்ரகுப்தா….. எனக்கு இதுவெல்லாம் ஒரு நொடி போழுதுவிஷயம்.. ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய் அத்தனையும் சொல்லி விடு. நான் செல்ல தயார்ஆகிறேன்…. என கூற…. அதற்கு சித்குப்தன்…. ஆம் தர்ம ராஜா. .. அந்தகல்யாண பெண்ணுக்கும்….. நீங்கள் எடுக்கப்போகும் இந்த உயிருக்கும்மறு ஜென்மத்திலும் ஏதோ ஒரு உறவு இருக்கிறது என்னவோஉண்மை…. அது எப்பேற்பட்டஉறவு என்று, விதி மறைத்து விட்டது….. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்….. என்பதை.செவி மடுத்த எமதர்மன்….. சரி அந்த உயிரை எடுத்து வருகிறேன் என சொல்லி விட்டு, தன் வாகனமானஎருமை கடாவின் மேல் ஏறி பூலோகம் புறப்பட்டார்.
பூலோகம் வந்த எமன்… கல்யாண வீடு எங்கே உள்ளது என்று பார்த்தார்…. ஒரு குறுகிய வழிக்கு அப்பால் இருந்ததுஅது …. தனதுஎருமையைபார்த்து…,.ஏய் எருமையே….. கல்யாண மேடையில் அமர்த்திருக்கும் மாப்பிளையைஉன் கொம்பால்குத்தி. அவன் குடலை உருவிவிட்டு வா….அவன் உயிரை எடுத்து கொண்டு எமலோகம் செல்லலாம் போ சீக்கிரம்…. என்று அவசரபடுத்தினார்.,எருமைஅப்போதும் மெதுவாக தான் சென்றது…. எமனுக்கு கோபம் வந்து விட்டது…அதன் வாலை கையில் தூக்கி பல்லால் 'நங் 'கென்றுகடித்து குதறினார்…. எருமை மாடு வலி தாங்க முடியாமல் நாலு கால் பாய்ச்சலில் கல்யாண வீட்டிற்குள் பாய்ந்தது…. கல்யாணத்திற்கு வந்திருந்த கும்பலை மிதித்து கொண்டு நேராக மணமேடையில் அமர்ந்திருந்தமாப்பிள்ளையை கொம்பால் அவன் வயிற்றில் குத்தி தூக்கியது….. அந்த கல்யாண வீடே அலறல் சப்தத்தில் கிடக்க…. மாப்பிளை குடல் சரிந்து விழுந்து செத்தான்…. எருமாடு வெளியே ஓடிவந்து விட்டது…எமன் அதன் முதுகில் தட்டி கொடுத்து விட்டு…. சபாஷ், இப்படி தான் என் மீது பழி வராமல் திட்டம் போட்டு செய்யணும்….. என கூற அப்போது வெளியே மிதந்து வந்தமாப்பிளையின் ஆத்மாவைபாசகயிறு வீசி பிடித்து கொண்டு எமலோகம்நோக்கி சென்றார் எமன்…..
கொண்டுபோன ஆன்மா புண்ணிய ஆன்மா என்பதால் அது மறைந்துபோய் விட்டது…அது எங்கு பிறக்க வேண்டுமோ அங்கே அனுப்பி விட்டார் பிரம்மன்……எமதர்மராஜன்,சித்ரகுப்தனை பார்த்து….. சித்ரகுப்தா எனக்கு ஒன்றை மட்டும் சொல்…ஏதோ இந்தபுண்ணியஆத்மாவுக்கும்அந்தபெண்ணுக்கும் ஒரு உறவு ஏற்படும் என்று கூறினாயே…. அது எப்போது…எந்த நாளில் என்பதை மட்டும் கொஞ்சம் கணித்து சரியாக சொல்…. என்றார்…. சித்ரகுப்தன் தன் கண்ணை மூடிக்கொண்டுகை விரல் விட்டு எண்ணி சொன்னான்….. அந்த பெண்ணுக்கு நாற்பத்து மூன்றாவது வயது…. புண்ணிய ஆத்மாவானஇந்த இளவரசனுக்கு இருபத்தஓராம் வயதில்அந்த உறவு ஏற்படும்….. என்றான்….
காலம்கடந்துபோய்கொண்டேஇருந்தது….. அந்த புண்ணிய ஆத்மா மரகததேசத்து மன்னனுக்கு,மகனாக பிறந்து செல்வ செழிப்புடன் வளர்ந்து வந்தான்…. யுவன் என்ற பெயருடன்……கல்யாணம் நின்றுபோனஅந்தபெண்ணுக்கும்ஒரு வைர வியாபாரிக்கும் அடுத்த ஆறு மாதத்தில்திருமணம் நடந்தது…ஒருஅழகான பெண்மகளை பெற்று வளர்த்தாள்.. ரம்பா என்ற பெயரில்வளர்ந்தாள்தன்னை போலவே அழகு சிறிதும் மாறா மல் அச்சு அசலாக தாய் சகுந்தலை போலவே இருந்தாள்…அந்த தாரகை ……வைர வியாபாரியின்மகள் அல்லவா……செல்வ செழிப்புடன் வளர்ந்தாள்….. ஒருநாள் இளவரன்யுவன் நகர வீதியில் குதிரையில் வலம்வரும் போது,, ரம்பா.…...தன்வயது ஒத்த தோழியர்களுடன்விளையாடி கொண்டிருந்த போதுயுவன் அவளை பார்த்து விட்டான்… நமது நாட்டில் இப்படிப்பட்ட அழகு தேவதையா……என்று கண் எடுக்காமல் அவளை பார்க்க…ரம்பா, அவனை வெட்கத்துடன்ஏறிட்டு பார்த்து விட்டு வீட்டுக்குள் ஓடினாள்…. தோழியர்கள் அவரவர் வீட்டில் அடைக்கலம் ஆனார்கள்….
யுவன் நேரே மரகத நாட்டு தலை நகருக்கு சென்று தன் தந்தையிடம் ரம்பாவைபற்றி சொல்ல..,. மன்னன் வைர வியாபாரியின்வீட்டுக்குபரிவாரங்களுடன் செல்ல….. கல்யாண பேச்சு எடுத்து ரம்பாவை தன் மகனுக்கு ஒரே வாரத்தில் கல்யாணம் செய்து வைத்தான் மரகத நாட்டு மன்னன்….. திருமணம் தட புடலாக நடந்தது..
இந்த விஷயம் எமனுக்கு தெரிந்தது…உடனே சித்ரகுப்தனைஅழைத்து கொண்டு பூலோகம் வந்தார் எமதர்மராஜா…சித்ரகுப்தனை பார்த்து எமன், நீ சொன்ன அந்த உறவு ஏற்படும் நாள் இதுவல்லவா….. வா கவனிக்கலாம்….என மண்டபத்தின் ஒரு ஓராமாய் மறைந்து நின்றுகொண்டு பார்த்தார்….. சித்ரகுப்தனும் அவர் கூட நின்றான்…. யுவனுக்கும் ரம்பாவுக்கும்திருமணம் முடிந்தது…தம்பதிகள் தாய் தந்தையரின்காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கி கொண்டனர்.. எல்லாம் முடிந்தது….. எமன் சித்ரகுப்தனை பார்த்து….. என்னஇது….நீ ஏதோ யுவனுக்கும் சகுந்தலைக்கும் உறவு ஏற்பட போகிறது என்று சொன்னீர்கள்.. யுவன் என்னடாவென்றால் சகுந்தலை காலில் விழுந்து வணங்குகிறானே…. என்று சித்ரகுப்தனை பார்த்து கேட்க, சித்ராகுப்தன்சொன்னார்,என்ன எமனே… அது தான் உறவு ஏற்பட்டு விட்டதே.. ….. மாமியார் மருமகன்என்ற உறவு… இன்னும்நாம் ஏன் இங்கு இருக்கணும்…நம் லோகம் போகலாம்,வாருங்கள் எனகூப்பிடஎமனோ, ஏன்யா.. என்னை நாற்பது வருடங்களாக உசுப்பேற்றி விட்டு… இது தான் அந்த உறவு என்கிறீர்கள்….நான் ஏதேதோ நினைத்து கொண்டு இருக்கிறேன்…, என்று கொஞ்சமகோபமாக கேட்டார்…அதற்கு சித்ரகுப்தன், எமனே….. யுகம் யுகமே நீங்கள் பாவிகளை விசாரித்து விசாரித்து கொஞ்சம் மூளை மழுங்கிபோய் விட்டது…. உறவுகள் பல…தந்தை மகள் உறவு…தாய் மகன் உறவு அக்காள் தம்பி உறவு…. அண்ணன் தங்கை உறவு… . இப்படி பலவகை உறவுகளில் இதுவும்ஒன்று…. உங்கள் எண்ணத்தில் பாலுறவு ஒன்றே உறவு என நினைத்து இப்படி பேசுவது, நீங்கள் வகிக்கும்பதவிக்கு அழகல்ல….. என்று கூறி நிறுத்த…. எமனோ, நான் அப்படி நினைத்து இங்கு நிற்கவில்லை..,. அப்படி ஏதாவது வேண்ட தகாத தவறு நடந்தால் யுவனை நான்கு அறை விடலாம்…என்று தான் நினைத்தேன் சித்ரகுப்தா…,என்று சமாளித்து, வெளியே வந்து எருமை வாகனம் மீது ஏறி போனார்…. எருமாடுகூட அவரை ஏளனமாக ஒரு மாதிரி பார்த்தது