·   ·  2164 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 15.11.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். முன்கோபம் விலகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். சொத்து வழக்கு தொடர்பாக சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் : சந்திராஷ்டமம் தொடர்வதால் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் சோர்வு, மன உளைச்சல் வந்து போகும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தராதீர். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கடகம் : நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

சிம்மம் : உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட நிலை மாறும். இனி அவர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.

கன்னி : நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். பங்குதாரர் ஆதரவு தருவார்.

துலாம் : கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம் : பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.

தனுசு : நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். கௌரவப் பதவி கிட்டும்.

மகரம் : ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் வரலாம். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்பதற்கு ஏற்பாடு செய்வீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும்.

கும்பம் : புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பீர்கள். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம் : குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதர வகையில் உதவியுண்டு. எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தராதீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும்.

  • 165
  • More
Comments (0)
Login or Join to comment.