·   ·  261 posts
  •  ·  0 friends

நேர்மறை எண்ணம்

தனது வாழ்வில் 40 ஆண்டுகள் கடுமையாக உழைத்துகுருவி சேர்த்தது போல உழைப்பின் மூலம் கிடைத்த தொகையை சேமித்து வந்தார் ஒருவர் .

தனது சேமிப்பின் மூலம் திரண்ட தொகையை வைத்து .... ஒரு அழகான வீட்டைக் கட்டுகிறார்.

புது வீடு என்றால் புதுமனை புகுவிழா இருக்கும்தானே . அந்த விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டு.... அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார் அந்த உழைப்பாளி.

விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது .

அந்த நிலையில் இரவு நேரத்தில் கனமழை. அத்துடன் சரியான நிலநடுக்கம்.

எங்கும் பலத்த சேதம் . நிறைய வீடுகள் நடுக்கத்தால் சேதமடைந்து விட்டன .

சிறுகச் சிறுக சேமித்து கட்டிய வீடு தரையோடு தரையாக நொறுங்கி கிடக்கிறது.

செய்தியை கேள்விப்பட்ட அந்த மனிதர் .... நேராக லாலா ஸ்வீட் கடைக்கு சென்றார் . தன்னால் முடிந்த அளவு இனிப்பு பண்டங்களை வாங்கி.... சிதிலமடைந்திருந்த அந்த வீட்டிற்கு செல்லுகிறார்.

அந்த வீட்டின் முன் நின்று மகிழ்ச்சியாக வருவோர் போவோருக்கெல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார் .

அப்போது ஒருவர் ஏனப்பா உனக்கு ஏதேனும் பைத்தியம் பிடித்து விட்டதா ? புதிதாகக் கட்டிய வீடு பொடிப் பொடியாக சிதறிக் கிடக்கிறது. நீயோ, ஸ்வீட் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் . என்ன ஆனது உனக்கு ?என்று கோபமாகவே கேட்டார்

அப்போது அந்த உழைப்பாளி சொன்னார்.... இன்று வந்திருக்கு கூடிய அந்த நில நடுக்கம் நான் குடி போனதற்குப் பிறகு வந்திருக்குமேயானால் புது வீட்டினுள் படுத்து உறங்கி இருக்கும்.... எனது ஒட்டுமொத்த குடும்பமும் சிதைந்து போய் இருக்கும்.

நல்ல வேளையாக நாங்கள் குடி போகும் முன்பாகவே.... நிகழ்ந்துவிட்ட இந்த இயற்கை பேரழிவுக்கு நான் நன்றி செலுத்தியாக வேண்டும் .

வீடு போனது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும்.... இன்று நடவாது நாங்கள் அங்கு குடி போன பிறகு ஏற்பட்டிருக்குமேயானால் விளைவு மோசமாகத்தான் இருந்திருக்கும் .

இன்று நடக்காமல் பிறகு நடந்திருக்குமே யானால் பொருள் இழப்போடு உயிர் இழப்புக்கும் வாய்ப்பு உண்டு. எனவே எது நடந்ததோ அதை நேர்மறை உணர்வோடு சந்தித்தால் எல்லாம் நலமே .

இது நடந்திருக்கவே கூடாது .... ஆனால் நடந்து விட்டது. அதற்காக ஒப்பாரி வைக்காமல் பொருள் தான் சேதமானதே தவிர உயிர் பாதுகாப்பாக இருக்கிறது என்ற...நேர்மறை சிந்தனை காரணமாக இங்கு நான் இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என்று மறுமொழியை மகிழ்ச்சியோடு பகிர்கிறார்..

நேர்மறை எண்ணம் கொண்டவர்களால் எத்தனை தடைகள் வந்தாலும் அதை சாதனையாக மாற்றலாம். எதிர்மறை சூழ்நிலைகள் உருவானாலும் கூட நேர்மறை சிந்தனைகள் இருந்தால் அதை எளிதாக முறியடிக்க முடியும்.

  • 1249
  • More
Comments (0)
Login or Join to comment.