- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 17.10.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். குழப்பம் நீங்கி வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல்அசதி விலகும். பணவரவு திருப்தியாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். பணவரவு உண்டு. வியாபாரரீதியான பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவு உண்டு. பால்ய நண்பர்கள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
துலாம்: நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராக் கடன் என்றிருந்த பாக்கிகள் வரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
விருச்சிகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வாகனப் பராமரிப்பு செலவு வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்று அதிக லாபம் ஈட்டுவீர்.
தனுசு: திட்டமிட்டது ஒன்றும், நடப்பது வேறாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருந்துவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்த முயற்சிப்பீர். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.
மகரம்: திட்டமிட்ட காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். தடுமாற்றம் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
கும்பம்: நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: குடும்பத்தில் ஒருவருவருக்கொருவர் சரியான புரிதல் ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.