·   ·  1417 posts
  •  ·  0 friends

தவுன் என்றால் என்ன?

பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.

மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.

பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.

பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுன்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள்.

பனம்பழங்களிலிருந்து எடுக்கப்படும் கொட்டை என்று அழைக்கப்படும் பனம்விதைகளை சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக கொட்டைக்குழி என்றழைக்கப்படும் மண் குவியலில் இட்டு வைப்பார்கள் இது பொங்கல் நேரங்களில் பனங்கிழங்குக்காக வெட்டி எடுக்கப்படும் அந்த நேரங்களில் அரிவாள் வைத்து பனங்கொட்டைகளை பிளந்து அதன் உள்ளிருக்கும் தவுனைப் பெறலாம் இதை வெட்டுவது சற்று கடினம்தான் வெட்டினால் கிடைப்பது தின்ன தின்ன திகட்டாத சுவையுடய தவுன் எங்கள் ஊர் பனை மரங்கள் அதிகம் கானப்படுவதால் எங்களுக்கு இதை சாப்பிட அதிகம் வாய்ப்பு கிடைக்கும்.

கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது.

டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுனையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.

  • 55
  • More
Comments (0)
Login or Join to comment.