
குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா ?
மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பாதாம் பங்களிக்கிறது. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை பாலில் கலந்து குடிப்பது ஊட்டச்சத்து நிபுணர்களாலும் ஆயுர்வேதத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று பசும்பால். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாலில், சில இயற்கை பொருட்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்களின் உணவுமுறைகள் ஆரோக்கியமானதாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று குழந்தை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க பாலில் சேர்க்க வேண்டிய 5 பொருட்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பல தலைமுறைகளாக குழந்தைகளுக்கு முழுமையான உணவாகப் பால் கருதப்படுகிறது. அதற்கு காரணம் பாலில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் பாலுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்தால், உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் உலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை பாலுடன் கலப்பதன் மூலம், குழந்தைகள் சீரான அளவு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.