·   ·  384 posts
  •  ·  0 friends

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி - என்னாங்க...சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா...?? நான் ரயிலேறின பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...!!

கணவன் - "மாட்டேன்"...

மனைவி - "எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"...

கணவன் - "கவலை படாம போயிட்டு வாம்மா, நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"...

மனைவி- "உங்கள நம்ப முடியாது, எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்"....

பாயிண்ட் நம்பர் 1...

"வீட்ல வச்சது வச்சபடி இருக்கணும். எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்".

பாயிண்ட் நம்பர் 2... "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன், காபி, டீ போட்டு சாப்ட்டா... டம்ளரையும், பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடாமா, உடனே கழுவி கவுத்தி வச்சிடணும்"...

கணவன் - "உத்தரவு"...

மனைவி - பாயிண்ட் நம்பர் 3...

"சாதம் மட்டும் சமைச்சிக்குங்க. பக்கத்து வீடுகள்ல இருக்கிற சுந்தரியக்காவும், மாலதியும் அவங்க வீட்டு கொழம்பு, கூட்டு, பொரியல கொண்டு வந்து கொடுப்பாங்க. அத சாப்ட்டுட்டு... மறக்காம பாத்திரத்த கழுவி அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அப்பத்தான் மறுநாளுக்கும் கொழம்பு வரும்"...

கணவன் - "சரிம்மா"...

மனைவி - பாயிண்ட் நம்பர் 4...

பொண்ணுங்கள கூடப் பொறந்தவங்களா பாருங்க. அனாவசியமா வழியாதீங்க"...

"ம்ம்... ம்ம்"...

பாயிண்ட் நம்பர் 5...

"வீட்ல நான் இல்லன்னு, உங்க குடிகார பிரண்டுகள கூப்ட்டு வந்து... கூத்தடிச்சி ஏரியால உங்களுக்கு இருக்கிற நல்ல பேர கெடுத்துக்காதீங்க"

"ஓக்கேம்மா"...

பாயிண்ட் நம்பர் 6...

"அடக்க ஒடுக்கமா இருங்க... வீட்ட விட்டு வெளிய போனா... நீட்டா தலைய சீவி, பவுடர் போட்டுட்டு போங்க... பாண்டை மாதிரி போகாதீங்க"...

"சரிம்மா"...

பாயிண்ட் நம்பர் 7...

"எங்கயாவது பணத்த ஒளிச்சி வச்சிருக்கனான்னு எலி மாதிரி எல்லாத்தையும் உருட்டாதீங்க. பீரோல கணிசமா பணத்த எண்ணி வச்சிருக்கேன். வேணும்னா எடுத்து செலவு பண்ணுங்க... ஆனா, நான் வர்றதுக்குள்ள வச்சிடுங்க. அப்படி வக்கலன்னா பெனால்ட்டி போட்டு வாங்கிடுவேன்"...

"உம் பணம் எனக் கெதுக்கு?? எல்லாம் பத்திரமா இருக்கும் நீ பத்திரமா போயிட்டு வா"...

"அப்புறம் பாயிண்ட் நம்பர் 8...

"பால்காரன் போட்டுட்டு போற பால் பாக்கெட்ட உடனே எடுத்து கழுவி ஃபிரிஜ்ல வச்சிடுங்க. இல்லன்னா பூனை தூக்கிட்டுப் போயிடும்... என்ன கேக்குறீங்களா"...!?

"கேக்குது... கேக்குது"...

"அப்புறம் பாயிண்ட்"...

கணவன் - யம்மா போதும்மா.. ரொம்ப லெந்தியா போகுது... பாரு ரயிலும் பிளாட்பார்ம்ல வந்திட்டிருக்கு"...

மனைவி -;"சரி... சரி... சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்"...

நான்காம் நாள் காலை.... மனைவி வீடு வந்த பின்

"என்னதிது... வீடு... வீடு மாதிரியா இருக்கு?? ஒரே தூசியா இருக்கு... வெளக்க மாத்த எடுத்து கூட்டக் கூடவா உங்களால முடியல"...!?

கணவன் - கூட்டலாம்னு தான் நெனச்சேன்... ஆனா, நீ சொன்ன மொத பாயிண்ட் ஞாபகம் வந்துச்சி... அதனால வெளக்க மாத்தையே தொடல...

மனைவி - "அப்படி நான் என்ன சொன்னேன்"...!?

கணவன் - "வச்சது வச்ச எடத்துல இருக்கணும்னு நீ தான சொன்ன... அதனால, இந்த நாலு நாளும் வெளக்க மாத்த அம்மா சத்தியமா கையிலயே தொடலையே"...!!

மனைவி - "அடப்பாவி மனுஷா"...

  • 605
  • More
Comments (0)
Login or Join to comment.