
இன்றைய ராசி பலன்கள் - 17.8.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடிவு பெறும். அலுவலகத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். உடல் நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்கிறீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம்
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகள் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிர்பாராத சில செலவுகள் உருவாகும். வெளிவட்டத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவு செலவில் விவேகத்துடன் செயல்படவும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல்கள் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கடகம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகள் வழியில் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைபட்ட சில கடன் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
சிம்மம்
மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். திடீர் பயணங்களால் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். மக்கள் சேவையில் கவனம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கன்னி
மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல்கள் உருவாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். அசதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
தன்னம்பிக்கை ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். துணைவர் வழியில் ஆதரவுகள் பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில சலுகைகள் சாதகமாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய அனுபவங்கள் உருவாகும். வழக்கு செயல்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். குழந்தைகளிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். வீடு மனை விற்பதில் இருந்த தாமதங்கள் விலகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். வேலையாட்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பிரச்சனைகள் குறையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மீனம்
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் ஏற்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை