·   ·  538 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 4.11.2025

மேஷம்

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகளில் பொறுமை செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் சுமாராக நடைபெறும். அரசு சார்ந்த காரியத்தில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

ரிஷபம்

தடைபட்டிருந்த புதிய படைப்புகள் வெளிப்படும். சுப காரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலமான சூழல் அமையும். இடுப்பு மற்றும் காலில் சிறுசிறு வலிகள் தோன்றி மறையும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மிதுனம்

தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சிக்கனமாக செயல்படுவது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் மூலம் புரிதல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

இணைய வர்த்தகங்களில் நிதானத்தோடு செயல்படவும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிறு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

சிம்மம்

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பிடிவாத போக்கினேன் மாற்றிக் கொள்வது நன்மை தரும். பூர்விக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கன்னி

திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து முடிவு எடுக்கவும். கூட்டாளிகள் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் பணிகளை முடிப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சஞ்சலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆவணத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். சிக்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

தனுசு

குழந்தைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூக பணிகளில் ஆதரவுகள் மேம்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பகை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். கலைத்துறைகளில் மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

மனதில் இருந்த கவலைகள் விலகும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மீனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். சில அனுபவங்கள் மூலம் புதிய அத்தியாயம் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 429
  • More
Comments (0)
Login or Join to comment.