·   ·  279 posts
  •  ·  0 friends

பயம் ஒரு பெரிய நோய்

*அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்..*

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார்.

பீர்பாலை பார்த்தார்.

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

*அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.*

*கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.*

*அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.*

*பயம் ஒரு பெரிய நோய்.*

*நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.*

*அச்சமின்மையே ஆரோக்கியம்!*

  • 937
  • More
Comments (0)
Login or Join to comment.