·   ·  2154 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 14.11.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்து கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். சிலர் பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: எதிர்பாராத பணவரவால் உற்சாகம் பிறக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சைனஸ் பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

துலாம்: குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் முடிவுக்கு வரும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு: வீண் அலைச்சல், விரையச் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.

மகரம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: சொத்து தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

  • 50
  • More
Comments (0)
Login or Join to comment.