- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 5.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற பணிகள் முடியும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் குறித்து அலைச்சல், டென்ஷன் வரலாம். தாயாரின் மருத்துவ செலவு குறையும். மனைவிவழி உறவினர்களுடன் ஈகோ பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். விரயச் செலவுகள் குறையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கடகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். எதிர்ப்புகளை முறியடித்து வெல்வீர்கள்.
கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் அறிவுரைகளை ஏற்று செயல்படவும். பணிச்சுமை அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். லாபம் பார்க்கலாம்.
துலாம்: வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும்.
விருச்சிகம்: புது ஆடை ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. புண்ணிய தலங்கள் சென்று வருவீர். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி நண்பர்களாவர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
கும்பம்: முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். பூர்வீக வீடு, மனை விற்பனையாகும். வியாபாரத்தில் குழப்பங்களை சமாளிக்க வேண்டிவரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெல்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.