·   ·  791 posts
  •  ·  0 friends

மருத்துவ குணங்கள் நிறைந்த கொத்தமல்லி

ஆசியாவை தாயகமாகக் கொண்ட கொத்தமல்லி, நம் உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தான் இது அதிகம் விளைகிறது. மற்ற நாடுகளை விட இந்திய கொத்தமல்லிக்குத் தான் மவுசு அதிகம்.

பச்சை கொத்தமல்லி, உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. அதோடு வாயுவை போக்க, பித்தத்தை தணிக்க, உடல் சூட்டை குறைக்க, நஞ்சை முறிக்க, போதையை தீர்க்க, ரத்த அழுத்தத்தை குணப்படுத்த, இதய பலத்தை பெருக்க சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி, ஈ என, பல வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக இருக்கிறது.

ஜீரணத்திற்கு உறுதுணையாகவும், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். அதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இது கட்டுப்படுத்தும்.

கொத்தமல்லி இலையில், 'டோடேசெனால்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது, உணவு, 'புட் பாய்சன்'ஆவதற்கு காரணமான கிருமியை கொன்று விடுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர், அமெரிக்க விஞ்ஞானிகள்.

நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் நரம்பியல் மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது, கொத்தமல்லி. இது, உடலில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலை சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.

மூக்கடைப்பு மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு கொத்தமல்லி தழையை துவையலாக செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சரியாகும்.

சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரி செய்கிறது.

உடலைக் குளிர்ச்சியாக்கும், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு கலந்து பருகி வந்தால், வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.

கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் தோல் கருமை மறையும். கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேல் பற்று போடுவதால், கண் பிரச்னைகள் குறைகிறது.

மாதவிலக்கு ஒழுங்கின்மை உடைய பெண்கள், தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு, கொத்தமல்லி இலை நிவர்த்தி அளிக்கவல்லது.

கொத்தமல்லியை சாப்பிடுவதால், பெண்களுக்கு கருப்பை வலுப்படும். சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும். கொத்தமல்லித்தழையை அரைத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால், நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

  • 50
  • More
Comments (0)
Login or Join to comment.