·   ·  23 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 31.7.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தோற்றப்பொழுவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் தெளிவுகள் பிறக்கும். சாதனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

ரிஷபம்

குழந்தைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வருங்காலம் குறித்த சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

மிதுனம்

மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செய்லபடவார்கள். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். சகோதர வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்வு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது உயர்வை தரும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. வியாபார இடமாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். குழப்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

துலாம்

குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். விமர்சனப் பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய சிக்கல்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். களிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

தனுசு

முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகள் அமையும் . குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். விவசாய பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். லாபம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

கும்பம்

மறைமுகமான சில தடைகளால் தாமதம் உண்டாகும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்பும் அலைச்சலும் ஏற்படும். உயர்கல்வி குறித்த செயல்களில் பொறுமை காக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். பூர்விக சொத்து செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மீனம்

போட்டி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருந்தால் ஆதாயம் ஏற்படும். கௌரவ பதவிகள் மூலம் மதிப்புகள் உயரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த வேறுபாடுகள் நீங்கும். கமிஷன் வகைகளால் வரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 354
  • More
Comments (0)
Login or Join to comment.