·   ·  1429 posts
  •  ·  0 friends

நட்புக்கு கொடுத்த மரியாதை

கேரளா - காட்டாக்கட பேருந்து நிலையம் அருகே சுமார் 20 ஆண்டுகளாக “த்ரிஷ்யா ஸ்டுடியோ” செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஸ்டுடியோவின் திறப்பு விழாவை நடத்துவதற்காக, அதன் உரிமையாளர் பினு அழைத்தவர் யார் தெரியுமா? பல ஆண்டுகளாக அவரது கடையின் அருகில் கடலை விற்பனை செய்து வரும் முகம்மது ஹனீப் இக்காவை.

ஸ்டுடியோ ஆரம்பித்த காலம் முதலே பினு ஹனீப் இக்காவை பார்த்து வருகிறார். பேருந்து நிலையத்தில் வியாபாரம் முடிந்ததும், தனது கடலை விற்பனைப் பொருட்களை ஹனீப் இக்கா பினுனின் ஸ்டுடியோவில்தான் வைத்து செல்வார். மறுநாள் காலை வந்து மீண்டும் எடுத்துச் செல்வார். இப்படியே பல ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது.

இந்த வயதிலும் யாரையும் சார்ந்து இல்லாமல் உழைத்து வாழும் ஹனீப் இக்காவின் உற்சாகமும் நேர்மறை எண்ணமும் பினுவை மிகவும் கவர்ந்துள்ளது. “அவரை பார்க்கும்போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது” என்று பினு கூறுகிறார்.

தனது புதிய பெரிய ஷோரூமின் திறப்பு விழாவிற்கு வேறு யாரையும் தேட வேண்டிய அவசியமே அவருக்கு தோன்றவில்லை. நண்பர்களும் குடும்பத்தினரும் பினுவின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு அளித்தனர். பிறகு நேராக ஹனீப் இக்காவை சந்தித்து விஷயத்தை கூறினர். முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாலும், இறுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஹனீப் இக்கா சம்மதித்தார்.

திறப்பு விழா நாளில், ஹனீப் இக்கா வந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பினுவின் ஸ்டுடியோவை திறந்து வைத்தார். அங்கு உள்ளூர் MLA மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பினுவுக்கும் ஹனீப் இக்காவுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • 199
  • More
Comments (0)
Login or Join to comment.