- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 30.10.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சி நல்ல விதத்தில் முடியும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம்: சுபச் செலவு மனநிறைவைத் தரும். வீட்டுக்குத் தேவையான நவீன மின்னணு பொருட்களை வாங்குவீர். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடி புகுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் வெறுப்பை தரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.
கடகம்: புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தியானம், ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி: உறவினர் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் சிறப்பாக கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றியுண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம்: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீக மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் நீடித்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
விருச்சிகம்: குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலைத்தூக்கும். உடல்சோர்வு, அலைச்சல் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
தனுசு: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பொறுப்புகள் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அன்பாக நடத்தவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மகரம்: புது எண்ணங்கள் தோன்றும். பால்ய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரம் திருப்தி தரும்விதமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கும்பம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். வாங்கிய கடனை பைசல் செய்வீர். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்று வெற்றிகளைக் குவிப்பீர்கள். பிரச்சினைகள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
மீனம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமாக முடிவுகளை எடுப்பீர். தாய்வழியில் ஆதரவு உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர். முக்கிய அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கருத்தை ஏற்று நடக்கவும்.