·   ·  1454 posts
  •  ·  0 friends

பிச்சை எடுத்த காசில்… 1.6 கோடி நன்கொடை கொடுத்த மனிதர்

தூத்துக்குடி பூல் பாண்டியன் தாத்தா – மனிதநேயத்தால் தமிழ்நாட்டையே நெகிழவைத்த உண்மை கதை!

இன்றைய உலகத்தில், சொந்த குடும்பத்திற்கே உதவ தயங்கும் மனிதர்கள் இருக்கும் நேரத்தில்…

தனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் சமூக நலனுக்காக செலவழித்து வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் தாத்தா!

தூத்துக்குடி மாவட்டத்தின் சாந்திநகர் பகுதியை சேர்ந்த இந்த முதியவர், வாழ்க்கையில் சாதாரண மனிதர் அல்ல…

கஷ்டம், துன்பம், பசி, ஏமாற்றம் – எல்லாவற்றையும் நேரில் சந்தித்து வாழ்ந்த மனிதர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பைக்கு சென்றிருந்தார்.

அங்கு கட்டிட வேலை, சிறு தொழில்கள், கூலி வேலை என்று கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்தினார்.

ஆனால் வயது ஆக ஆக உடல்நிலை குறைய தொடங்கியது.

அதற்குள் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.

வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருக்க வேண்டிய பிள்ளைகளும் அவரை கைவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் குடும்பத்திற்காக உழைத்த மனிதர்…

இறுதியில் தனிமையில் நின்றார்.

வேறு வழியின்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பிய பூல் பாண்டியன் தாத்தா, பேருந்து நிலையங்கள், கோயில் வாசல்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ ஆரம்பித்தார்.

ஆனால் அந்த பிச்சை…

அவரது வயிற்றுக்காக மட்டும் இல்லை!

“நான் அனுபவித்த கஷ்டத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது…”

என்ற எண்ணமே அவரை ஒரு சாதாரண மனிதரிலிருந்து மாபெரும் மனிதராக மாற்றியது.

ஆரம்பத்தில் அவர் பிச்சையாக கிடைத்த சிறு தொகைகளை சேமித்து, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா வாங்கிக் கொடுத்தார்.

சில அரசு பள்ளிகளுக்கு சிறிய உதவிகளும் செய்தார்.

அதன் பிறகு வந்தது கொரோனா காலம்…

நாடு முழுவதும் ஊரடங்கு.

மக்கள் பசி, வேலை இழப்பு, பயம் என்று தவித்துக் கொண்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில், “இந்த பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும்” என்று நினைத்த பூல் பாண்டியன் தாத்தா, தானாக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்!

ஒரு பிச்சைக்காரர் அரசுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கியது அப்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.

அதன் பிறகு அவர் நிற்கவே இல்லை…

பள்ளி கட்டிடங்களுக்கு உதவி

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

பொதுநல நிதிக்கு நன்கொடை

சமூக நலத்திட்டங்களுக்கு பண உதவி

இப்படி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1.6 கோடி வரை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது!

சொந்தமாக பெரிய வீடு இல்லை…

விலையுயர்ந்த உடைகள் இல்லை…

ஆனால் ஆயிரம் கோடி பணக்காரர்களுக்கும் இல்லாத மனசு இந்த மனிதருக்கு இருக்கிறது!

சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகும், அவர் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பொதுநல நிதிக்காக ரூ.10,000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அவரது இந்த செயலை பார்த்து அதிகாரிகளே நெகிழ்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசும் அவரை அழைத்து கௌரவித்துள்ளது.

“பணம் இருந்தால்தான் உதவி செய்ய முடியும்” என்று நினைப்பவர்களுக்கு…

“மனசு இருந்தால் போதும்” என்று தனது வாழ்க்கையால் பதில் சொல்லியுள்ளார் பூல் பாண்டியன் தாத்தா!

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் தர வேண்டியது மரியாதை மட்டுமல்ல…

இந்த மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்!

  • 16
  • More
Comments (0)
Login or Join to comment.