·   ·  1685 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 18.7.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: தள்​ளிப் போய்க் கொண்​டிருந்த திரு​மணம் கைகூடி வரும். குடும்​பத்​தில் சந்​தோஷம் நிலைக்​கும். வாக​னத்தை சரி செய்​வீர்​கள். வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​வது நல்​லது.

ரிஷபம்: புதி​ய​வரின் நட்​பால் உற்​சாகமடைவீர்​கள். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டு​வீர்​கள். வேற்​றுமதத்​தவர் உதவு​வார். வியா​பாரத்​தில் லாபம் வரும். பங்​கு​தா​ரர்​களின் ஆலோ​சனை​களை ஏற்​கவும். அலு​வல​கத்​தில் மேல​தி​காரி​கள் ஆதரவு தரு​வர்.

மிதுனம்: குடும்​பத்​தில் உங்​கள் கை ஓங்​கும். உறவினர், பழைய நண்​பர்​கள் உதவி தேடி வரு​வார்​கள். தாயாருக்கு இருந்து வந்த மருத்​து​வச் செல​வு​கள் குறை​யும். அக்​கம் பக்​கத்​தினரை பகைத்​துக் கொள்​ளாதீர். வியா​பாரத்​தில் புது சரக்​கு​கள் இறங்​கும்.

கடகம்: தந்​தைவழி உறவினருடன் இருந்த மனஸ்​தாபம் வில​கும். பிள்​ளை​களின் பாசம் அதி​கரிக்​கும். அநாவசிய செல​வு​களை கட்​டுப்​படுத்​து​வீர். அலு​வல​கத்​தில் உங்​கள் அருமை புரி​யும். வியா​பாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களைக் கவருவீர்.

சிம்​மம்: பிள்​ளை​கள் படிப்பு தொடர்​பாக அலைச்​சல், செலவு வரக்​கூடும். குடும்​பத்​தினரின் ஆலோ​சனையை கேட்டு செயல்​படு​வது நல்​லது. வியா​பாரத்​தில் பழைய பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷ​யத்​தில் தலை​யி​டா​மல் இருக்​க​வும்.

கன்னி: சமயோஜித​மாக செயல்​பட்டு சில வேலைகளை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தில் உங்​கள் பேச்​சுக்கு மதிப்பு கூடும். வியா​பாரத்​தில் பழைய சரக்​கு​கள் விற்​றுத் தீரும். எதிர்​பார்த்த கடனுதவி கிட்​டும். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். மேல​தி​காரி​கள் பாராட்டு​வர்.

துலாம்: பழைய பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பீர்​கள். பிரபலங்​களின் அறி​முகம் கிட்​டும். அரசால் அனுகூலம் உண்​டு. மனை​வி, தாயாரின் உடல்​நிலை சீராகும். அலு​வல​கத்​தில் பணி​களை விரைந்து முடிப்​பீர்​கள். வியா​பாரத்தை பெரியள​வில் விரிவுபடுத்த முயற்சிப்​பீர்.

விருச்​சிகம்: விலை உயர்ந்த பொருட்​கள் வாங்​கு​வீர்​கள். மனை​விவழி உறவினர்​கள், பழைய நண்​பர்​கள் உங்​கள் உதவி நாடி வரு​வர். பிள்​ளை​களை புதிய பாதை​யில் வழி நடத்​து​வீர். அலு​வல​கத்​தில் உங்​களின் பணி சிறப்​பாக இருக்​கும். வியா​பாரத்​தில் பங்​கு​தா​ரர் கிடைப்​பார்.

தனுசு: உங்​களின் ஆளு​மைத் திறன் கூடும். குடும்​பத்​தில் உங்​கள் கை ஓங்​கும். தாயார், மனை​வி​யுடன் இருந்த மோதல்​கள் நீங்​கும். முன்​கோபத்தை தவிர்ப்​பது நல்​லது. மாணவர்​கள் உற்​சாக​மாக காணப்​படு​வர். வியா​பாரத்​தில் லாபம் உண்​டு. அலு​வல​கத்​தில் அமைதி காக்​க​வும்.

மகரம்: எதிர்​பா​ராத சந்​திப்பு நிகழும். பால்ய நண்​பர்​கள் உதவுவர். உடன்​பிறந்​தோர் விருப்​பத்தை கேட்​டறிந்து நிறைவேற்​று​வீர்​கள். வியா​பாரத்தை விரிவுபடுத்த புது முயற்​சிகள் எடுப்​பீர்​கள். அலு​வல​கரீ​தி​யாக வெளியூர் பயணங்​கள் மேற்​கொள்​வீர். சக ஊழியர்​கள் மதிப்​பர்.

கும்​பம்: சகோதர வகை​யில் செல​வு, அலைச்​சல் வரும். வாக​னத்​தில் நிதானம் தேவை. வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். பங்​கு​தா​ரர்​களின் ஆலோ​சனையை ஏற்று செயல்​பட​வும். அலு​வல​கத்​தில் உங்​களுக்கு பிடித்​த​மான துறைக்கு மாற்​றப்​படு​வீர்​கள்.

மீனம்: எதிர்​பார்த்த உதவி தக்க சமயத்​தில் கிடைக்​கும். தெளி​வான முடிவு​களால் சுற்​றி​யிருப்​பவர்​களின் நன்​ம​திப்பை பெறு​வீர்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷ​யத்​தில் தலை​யி​டா​மல் இருக்​க​வும்​. வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தா​ரர்​கள்​ வளைந்​து ​கொடுத்​து ​போ​வார்​கள்​.

  • 90
  • More
Comments (0)
Login or Join to comment.