·   ·  979 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 25.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

ரிஷபம்

மற்றவர்கள் பற்றிய பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் உண்டாகும். மேற்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கடகம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறுதூரப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் மறையும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனம் விட்டு பேசுவதால் தெளிவுகள் பிறக்கும். இடம் மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கையும் முக்கியத்துவமும் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்களிடம் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கருத்துக்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் கோபம் இன்றி செயல்படவும். வியாபார செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிர்வாக சார்ந்த செயல்பாடுகளில் அனுசரித்து செல்லவும். அனுகூலம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

தனுசு

உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் உருவாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கௌரவ பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

தந்தை வழி உறவுகள் மூலம் சாதகமான சூழல்கள் உண்டாகும். துணைவர் வழியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பாசம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். இறை பிரார்த்தனைகள் மன அமைதியை கொடுக்கும். பழக்கவழக்கங்களால் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சிந்தித்து செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

  • 655
  • More
Comments (0)
Login or Join to comment.