வாழ்க்கைப் பாதை
ஒரு செல்வந்தர் மரத்தடியில் இருந்த சாமியாரின் முன் சோகமாக அமர்ந்திருந்தார்.சாமியாரின் சாந்தமான முகம் செல்வந்தரை பொறாமை கொள்ள வைத்தது.
சாமியார் செல்வந்தரிடம்கேட்டார், "மகனே, ஏன் இந்த சோகம். செல்வந்தர் சொன்னார், " சாமி, என்கிட்ட செல்வம், ஆரோக்கியம் எல்லாமே இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினேன். அன்று என்னிடம் செல்வங்கள் இல்லை. அதனால் நான் விரும்பியவள் எனக்கு கிடைக்கவில்லை. வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். அவள் இல்லாமல் வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது." சாமியார் எதுவும் பேசாமல் செல்வந்தரின் கையைப் பிடித்து கண்களை மூடினார். சிறிது நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
பிறகு அவரிடம் "மகனே அவள் பெயர் ****யா," என்று கேட்டார். அதைக் கேட்ட செல்வந்தர் ஆச்சரியமாக ஆமாம் சாமி என்றார். பின்பு எப்படி கண்டுபிடித்தீர்கள், ஞான திருஷ்டியில் பேருமா தெரியுது என்று கேட்டார் .
உடனே சாமியார் சொன்னார் ,"அவள் என்னைத் தான் திருமணம் செய்தாள். நான் சாமியாராகி விட்டேன் "என்றார். இப்போது புரிகிறதா " உன்னிடம் இருந்து இறைவன் ஒன்றை பறித்தால் , அது உனது நன்மைக்காக என்று ". இப்போது செல்வந்தன் கேட்டான் ," ஆனால் உங்களை இப்படி ஆக்கிவிட்டானே". உடனே சாமியார் கூறினார், " உன்னிடம் செல்வம் கொடுத்து மற்றவர்களுக்கு உதவ சொல்கிறான்
என்னிடம் ஞானம் கொடுத்து உன்னைப் போன்றோர்களிடம் புரியவைக்க முயற்சிக்கிறான்."
இப்போது செல்வந்தர் கேட்டார் ," இப்போது உங்கள் மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறார்." உடனே சாமியார், " அவள் வந்த நோக்கம் முடிந்தது . இறைவனடி சேர்ந்தார்."
மனம் வருந்திய செல்வந்தர் அங்கிருந்து சென்றார்.