·   ·  2211 posts
  •  ·  0 friends

விடியலில் மலர்ந்த நம்பிக்கை

ஒரு சிறிய கிராமத்தில் முருகன் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது அறுபதை கடந்து விட்டது. வாழ்க்கையில் பல தோல்விகளை கண்டவர். கடைசியாக தொடங்கிய சிறு தொழில் கூட நட்டத்தில் முடிந்து விட்டது. எல்லோரும் அவரை பார்த்து, இனி இவரால் ஒன்றும் முடியாது என்று பேசிக் கொண்டார்கள். அவரும் மனம் உடைந்து, காலையில் எழுவதற்கே விருப்பம் இல்லாமல் படுக்கையிலேயே கிடந்தார்.

ஒரு நாள் அதிகாலையில், அவருடைய பேரன் வந்து அவர் கையை பிடித்து இழுத்தான். தாத்தா, வெளியில் வந்து பாருங்கள், சூரியன் எவ்வளவு அழகாக உதிக்கிறது என்றான். விருப்பம் இல்லாமல் வெளியில் வந்த முருகன், அந்த காலை ஒளியை பார்த்தார். இருட்டு எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், காலையில் சூரியன் மீண்டும் எழுந்து விடுகிறது. பறவைகள் மீண்டும் பாடுகின்றன. வயல்கள் மீண்டும் பசுமையாகின்றன. அந்த காட்சி அவர் மனதை தொட்டது.

அன்று முதல் அவர் ஒரு முடிவு எடுத்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து, ஒரு சிறு வேலையை தொடங்குவது என்று. முதலில் தன் வீட்டு தோட்டத்தில் கீரை பயிரிட்டார். பிறகு அதை சந்தையில் விற்றார். சிறு வருமானம் வந்தது. அந்த சிறு வெற்றி அவருக்கு பெரிய தன்னம்பிக்கையை தந்தது. இன்று அவர் அந்த கிராமத்திலேயே பலருக்கு வேலை தரும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

நண்பா, இரவு எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் விடியல் நிச்சயம் வரும். நம் வாழ்க்கையும் அப்படித்தான். நேற்று தோற்றிருக்கலாம். ஆனால் இன்று ஒரு புதிய நாள். இன்று எடுக்கும் ஒரு சிறு முயற்சி, நாளை பெரிய மாற்றத்தை தரும்.

  • 100
  • More
Comments (0)
Login or Join to comment.