·   ·  824 posts
  •  ·  0 friends

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தினசரி நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு போதுமானதா?

பொதுவாக பெண்கள் தங்கள் 30 வயதின் நடுப்பகுதி மற்றும் அதற்குப் பிறகு, சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். இது ஒரு நல்ல யோசனை மட்டுமல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக உணரவும், இதயத்தை வலுவாக வைக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

தவிர உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மனநிலையையும் எலும்பு ஆரோக்கியத்தையும் பராமரிக்க மிகவும் அவசியமானது. ஆனால் வாழ்க்கை மிகவும் பரபரப்பானது. வேலை, குடும்பம் மற்றும் மற்ற பரபரப்பான விஷயங்களுக்கு மத்தியில், "தினமும் வாக்கிங் செல்வது மட்டும் போதுமா?" என்று யோசிப்பது இயல்பானதே.. குறிப்பாக ஜிம் செல்வதோ அல்லது கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதோ சாத்தியமற்றதாக தோன்றினால் இந்த எண்ணம் வரலாம்.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் வாக்கிங் செல்வது உண்மையில் பல நன்மைகளைத் தருகிறது. தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது பல நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது என்பதை பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

  • 1104
  • More
Comments (0)
Login or Join to comment.