நாட்டு சர்க்கரை என்பது என்ன?
கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் காய்ச்சப்பட்டு ஆறினால் கிடைப்பது.
இரும்புச் சத்து நிறைந்தது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது- சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என. அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அவர்களுக்கு நாட்டு சர்க்கரையும் கெடுதல்.
நாட்டுசர்க்கரையில் கெமிக்கல் எதுவும் இல்லை -என்று சொல்வார்கள். ஆனால் நாட்டு சர்க்கரை தயாரிக்கும்போது, காஸ்ட்டிக் சோடாவை கரும்புச் சாறு கொதிக்கும்போது சேர்ப்பார்கள். அதிலிருந்து அழுக்கை நீக்க.
ஆனால் அப்படி பார்த்தால் எந்த உணவையும் சாப்பிடமுடியாது. எப்படியாயிருந்தாலும் வெள்ளை சர்க்கரையைவிட கெமிக்கல்கள் குறைவே.
எனவே சர்க்கரை நோயாளிகளைத் தவிர நாட்டுச் சர்க்கரையை எல்லோரும் சாப்பிடலாம். எந்த கெடுதலும் இல்லை. (டயட் கான்ஷியஸாக இருப்பவர்களுக்கு- நாட்டு சர்க்கரையிலும் கலோரி அதிகம்தான்)
காபி, தேநீர் மற்றும் இதர பானங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், அதுவும் தனிச் சுவை தரும்.