·   ·  44 posts
  •  ·  0 friends

இலவசங்களை கண்டு ஏமாறாதீர்கள்

ஒரு ஊரில் ஒருவன் மிருக காட்சி சாலை ஒன்றை அமைத்தான்!

அதற்கு நுழைவு கட்டணமாக 200₹ வைத்தான்!

ஒருவரும் வரவில்லை!

கொஞ்ச காலம் பார்த்தான் !

சரி நுழைவு கட்டணமாக 100₹ குறைத்து வைத்தான்!

அப்பொழுதும் யாரும் பார்வையிட வர வில்லை!

கடைசியில் பார்வை இலவசம் என்று அறிவித்தான்!

இப்பொழுது கூட்டம் அலை மோதியது!

அன்று நிறைய கூட்டம் இருந்தது!

மிருக காட்சி சாலையின் வாயில் கதவை பூட்டி விட்டு சிங்கத்தின் கூண்டின் கதவை திறந்து விட்டான்.

இப்பொழுது உள்ளே இருந்த மக்கள் பயத்தில் கேட்டை நோக்கி ஓடி வர!

அங்கே வெளியே செல்ல 300₹ கட்டணம் என்று ஃபோர்டு வைக்க பட்டு இருந்தது.

உயிர் பயத்தில் எல்லா மக்களும் 300₹ பணம் கட்டி வெளியே ஓடினர்!

  • 984
  • More
Comments (0)
Login or Join to comment.