
12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ
- பிரான்சில் உள்ள யுனெஸ்கோ தலைமையகம் நேற்று முன்தினம் செஞ்சி கோட்டை உட்பட, 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
- சத்ரபதி சிவாஜி ஆட்சியின் போது முக்கிய ராணுவ கேந்திரமாக விளங்கிய மஹாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகள், தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
- தமிழகத்தில் ஏற்கனவே மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஊட்டி மலை ரயில் ஆகியவை உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ளன.
- இப்பட்டியலில் செஞ்சி கோட்டை, 6வதாக இடம் பெற்றுள்ளது.
- செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்தும்.
- இதனால் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி, ரோப்கார் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.