·   ·  1324 posts
  •  ·  0 friends

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.

* சமணர்கள் இட்ட நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்து பதிகம் பாடி எவ்வித ஊறும் இன்றி சிவபெருமான் அருளால் வெளிவந்தார்.

* சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால் சோறு உண்டும் பதிகம் பாடி உயிருடன் இருந்தார்.

* தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி, தன்னை வலம் வந்து வணங்குமாறு செய்தார்.

* சமணர்கள் அவரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம் பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.

* திங்களூரில் அப்பூதியடிகளின் மகனை பாம்பு தீண்டி அவன் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.

* திருவீழிமிழலையில் அடியார்கள் பசியால் வருந்த, பதிகம் பாடி தினமும் சிவபெருமானிடம் ஒரு பொற்காசு பெற்று அடியார்கள் பசிதீர்த்து வந்தார்.

* திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பூட்டப்பட்டு பல்லாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கோவில் கதவுகளை பதிகம் பாடி திறக்கச் செய்தார்.

நற்றுணையாவது அண்ணாமலையாரே

* திருப்பைஞ்ஞீலிக்கு செல்லும் வழியில் இவர் பசியால் வருந்துவதை சிவபெருமான் அறிந்து ஒரு அந்தணராக வந்து சிவபெருமான் இவருக்கு கட்டமுது தந்து பசியாற்றியும், நீர் அருந்த ஒரு குளமும், இளைப்பாற ஒரு சோலையும் தந்தருளினார்.

* இந்த பூத உடலோடு கையிலாய தரிசனம் செய்ய நடந்து நடந்து கால் தேய்ந்து தவழ்ந்து சென்று கை தேய்ந்து, உருண்டு சென்று உடலும் தேய்ந்தபோது சிவபெருமான் அந்தன உருக்கொண்டு வந்து ஒரு குளத்தை காட்டி அதில் மூழ்கச் செய்து எழும்போது திருவையாறு சமுத்திர தீர்த்தக் கரையில் வெளிப்பட்டு ஆடி அமாவாசை தினத்தன்று கையிலாய தரிசனம் காண உதவினார்.

* இவர் பாடிய பதிகங்களை கேட்டு இறைவனே இவருக்கு ‘திருநாவுக்கரசர்’ என்னும் பட்டத்தை சூட்டினார்.

நற்றுணையாவது அண்ணாமலையாரே

* அப்பர் ஸ்வாமிகள் எழுவதாவது வயதில் தல யாத்திரை துவங்கி, 81 வயது வரை 5 முறை தலப்பயனம் மேற்கொண்டு பாடியுள்ள தலங்கள் 126. பதிகங்கள் 312. மொத்த பாடல்கள் 3066 ஆகும்.

* திருப்புகலூரில் இறைவனுடைய திருவடிகளை அடைய விரும்பி

" புண்ணியா_உன்னடிக்கே போதுகின்றேன் "

என்று பாடி சித்திரை சதயத்தன்று சிவபெருமானோடு இரண்டறக் கலந்தார்.

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.