·   ·  244 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 11.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகள் இடத்தில் அதிக உரிமைகளை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

அலுவலக பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். கால் வலி ஏற்பட்டு பின்னர் நீங்கும். சிந்தனைகளில் சில மாற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சுபகாரிய பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மிதுனம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கடகம்

நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். குடும்ப விஷயங்களில் பொறுமை வேண்டும். வேலை தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களால் திடீர் விரயங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

பண வரவில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில் நுட்ப தேடல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த வருத்தங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றியாகும். மனதளவில் சில மாற்றம் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும். போட்டி தேர்வுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். திட்டமிட்ட பணிகள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். கூட்டு தொழிலில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்

 

துலாம்

பயணங்கள் மூலம் அனுகூலம் பிறக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர்வு ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

விருச்சிகம்

பேச்சுக்களுக்கு மதிப்புகள் கூடும். உயர் பொறுப்பின் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். அரசு காரியங்களால் ஆதாயம் அடைவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

 

கும்பம்

மனதிற்கு பிடித்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். கடன் பிரச்சனைகள் மறையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் முயற்சிகள் சாதகமாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

தலைமை அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 930
  • More
Comments (0)
Login or Join to comment.