- · 0 friends
அறுபது வயதில் ஆரோக்கியமாக வாழ
- இரவில் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின் படுக்கைக்குச் சென்று காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்து பழகிக்கொள்ள வேண்டும்.
- இரவு சாப்பாட்டை 7–7:30 முடித்து கொள்ளுங்கள். ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பகல் உணவில் வீட்டு தயிர் குடல் நலத்திற்கு பயனளிக்கும்.
- தூக்கம் வரவில்லை என்பதற்காக ஒருபோதும் தூக்கமாத்திரை பக்கம் போய் விடாதீர்கள். நடைப்பயிற்சி வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
- காபி டீ குடிப்பதை விட்டு விடுவது மிகவும் நல்லது. இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் தூக்கம் பாதிக்கும். இதற்கு பதிலாக காய்கறிகள் சூப், சிக்கன் சூப் மிகவும் நல்லது. பகலில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். டாக்டரின் ஆலோசனை பெற்று B.complex மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
- தினமும் படிப்பதை கைக் கொள்வது மன நலத்திற்கு தேவையான ஒன்று.
- மறக்காமல் தினமும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். எல்லா (பேரப்) பிள்ளைகளுடன் சிரித்து மகிழுங்கள்.
- துணைவியின் ஆரோக்கியத்தை அறிந்துக் கொண்டு செயல்படுங்கள். வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கும்படி பாருங்கள். தோட்டத்தில் தண்ணீர் விடுங்கள்.
- சேர்ப்பு: சில நேரங்களில் வயதின் மூப்பு காரணமாக தூக்கம் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கும். இதற்கு கீழ்க்கண்ட முறையில் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கரண்டை கால்கள் நனைய 20–30 நிமிடங்கள் வைத்து பின் டவலால் ஒற்றி துடைத்து உடன் படுக்கைக்கு சென்று உறங்கவும். இதமான பால் பெரும்பாலோருக்கு உதவுவதில்லை.