இன்றைய ராசி பலன்கள் - 29.12.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களில் மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
குடும்பத்தில் பொறுப்புக்கள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்த்தியான சூழல் ஏற்படும். தொழில் மாற்ற முயற்சிகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் வழியில் அலச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கடகம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப பிரச்சனைகளை பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கன்னி
முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்களை தோன்றி மறையும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உத்தியோக பணிகளில் வரவுகள் மேம்படும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விருச்சிகம்
கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகைகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட சில பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபமும் மத்யமாக இருக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
வியாபார நிமித்தமாக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை அறிவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொத்து விற்பனையில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
மனதில் தெளிவுகள் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தந்திரமான சில செயல்களால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்