·   ·  1026 posts
  •  ·  0 friends

நெகிழ வைக்கும் நட்பு

இணையத்தில் பார்த்த புகைப்படம்... மனதிற்கு இதமாக இருந்தது என்பதால் பகிர்கிறேன்...

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது.

ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான்.

2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான்.

நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது.

இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது.

இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது...

இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்..

இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு.

உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்...

-முகநூல் பகிர்வு

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.