மருத்துவ குறிப்புகள்
நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் மற்றும் வாதநாராயணன் இலை
ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு குடம்
அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த தண்ணீரை, இளம் சூட்டில் காலில்
மேலிருந்து கீழாக மெதுவாக ஊற்ற, மூட்டுவலி, கால் வலி குணமாகும்.
* நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால், துத்தி இலையை
சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால்,
விரைவில், நகத்தின் கருமை மறையும்.
* அருகம்புல்லை சின்ன சின்னதாய் வெட்டி, நல்லெண்ணெயில்
போட்டு, வெயிலில் ஒரு வாரம் வைத்து, பின், அந்த எண்ணெயை,
இரண்டு மாதம் தலையில் தடவி குளித்து வந்தால், இளநரை
போய்விடும்.
* உருளைக்கிழங்கு சாறு, தக்காளி சாறு மற்றும் பப்பாளி சாறு மூன்றையும்
கலந்து, முகத்தில் பூசி முகம் கழுவ, கரும் புள்ளிகள் மறையும்