·   ·  525 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 2.11.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மறதியால் சில நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் ஒரு விதமான மந்த நிலை உண்டாகும். சகோதரிகளின் சுப காரியத்திற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய நம்பிக்கை உருவாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

மிதுனம்

எண்ணிய பணிகளை அலைச்சல்களுக்குப் பின்பு செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிறுதூர பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் அமையும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அசதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

சிம்மம்

கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். பூர்விக சொத்துக்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். செய்யும் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். காயப்படுத்தும் வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு. உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். பெரியோர் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பாடங்களில் இருந்த குழப்பங்கள் மறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

விருச்சிகம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணியாளர்களால் சில விரயங்கள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

தனுசு

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். சக பணியாளர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். தாயிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வி கற்றல் திறலில் மாற்றங்கள் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

கும்பம்

வியாபாரத்தில் மத்தியான லாபம் கிடைக்கும். துரித உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்கள் விஷயத்தில் விவேகத்துடன் முடிவெடுக்கவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பொறுப்புகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி நிமித்தமான விஷயங்களில் பொறுமையை கையாளவும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 269
  • More
Comments (0)
Login or Join to comment.