·   ·  1788 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 16.8.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

சிம்மம்: புது திட்டங்களை தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொல்லை அதிகரிக்கும். அலுவலக ரீதியாக பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

துலாம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். சகோதர வகையில் உதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்துசேரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.

மீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

  • 67
  • More
Comments (0)
Login or Join to comment.