·   ·  265 posts
  •  ·  0 friends

படித்தேன் ... பகிர்கிறேன்....

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், 100 ml. சுடுதண்ணீர், குடிக்கும் சூட்டில் குடிக்கவும். அதன் பிறகு அரைமணி நேரம் கழித்து, காஃபி, டீ அல்லது பிஸ்கெட் சாப்பிடலாம். பிரச்சினை இல்லை.

காரணம் வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் குடிக்கும் போது, அதனால் வயிற்றில் இருக்கும் அமிலத்தின் அளவு குறையும். ஜீரணம் நன்றாக ஆகும். உங்களுடைய இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

இன்னும் அத்துடன் வெந்தயம் தினமும் 25 கிராம் சாப்பிட, சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். இப்படி நிறைய பலன்கள் கிடைக்கும்.

எது சாப்பிடுவதாக இருந்தாலும், அதன் பிறகு அரைமணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உங்களால் எடுத்த வுடனேயே வெந்தயத்தை , தினமும் 25 சாப்பிட முடியாது. முதலில் 10 கிராம் அதாவது இரண்டு டீஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். அதன் பிறகு படிப்படியாக அதை 5 டீஸ்பூன் அளவு, அதாவது 25 கிராம் வரை சாப்பிடுங்கள்.

இங்கு சாப்பிடுவது என்றால், வெந்தயத்தை அப்படி யே, வாயில் போட்டு முழுங்குவது என்று அர்த்தம். முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், வெந்தய நீர் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது.

  • 1174
  • More
Comments (0)
Login or Join to comment.