·   ·  628 posts
  •  ·  0 friends

உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர்‌ வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும். ஆமணக்கு எண்ணெய் சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் நல்ல பயனைத் தரும்.

கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள்.

நச்சுகளை நீக்கும் போது உணவில் குளிர்ந்த பானங்கள், அதிகப்படியான ஆல்கஹால், காஃபின், புகை பிடிக்கும் பழக்கம், அதிகமாக பால் பொருட்களை சாப்பிடுதல், அதிக இனிப்பு பழங்கள், உணவுகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு பொருட்கள், பழைய உணவு, பதப்படுத்தப்படும் உணவு, மைக்ரோசாஃப்ட் ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய் மற்றும் வினிகர் உட்பட புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை டீயை தினமும் அருந்துவது நல்லது. உடலில் உள்ள நச்சுகளை நீக்க வேண்டும் எனில் அதற்கான பெஸ்ட் சாய்ஸ் பிளாக் டீ அருந்துவது தான். உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, கடுகு விதைகள் போன்ற மூலிகை மற்றும் அதிக மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.

  • 101
  • More
Comments (0)
Login or Join to comment.