·   ·  1590 posts
  •  ·  0 friends

குடிமகனுக்கு ஒரு நீதி, அரசியல்வாதிக்கு ஒரு நீதி

1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிடலாம்.

2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.

ஆனால் ஒரு அரசியல்வாதி சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

3. ஒரு குடிமகன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ, ஒரு வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு அரசியல்வாதி பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

4. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

5.ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகள் உண்டு.

ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பிக்கு எந்த நிபந்தனையும், இன்றி வாழ் நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்.

- திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,தலைமை அரசு வழக்கறிஞர், பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

----------------------------------------------------------

குடிமகனுக்கு ஒரு நீதி, அரசியல்வாதிக்கு ஒரு நீதி என்று இருக்கும் தற்போதைய சட்டங்களை மாற்றி அமைக்க தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை எந்தக் கட்சியாவது நாடாளுமன்றத்தில் கொண்டு வருமா?

மற்ற எல்லாவற்றையும் விடுங்கள்.

சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்கள் எழுத்து மற்றும் நேர்முகம் என்று இரண்டு கட்டங்கள் கொண்ட ஒரு தகுதித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவார்களா?

அப்படி ஒரு மசோதாவை முதலில் சிந்திக்கக்கூட மாட்டார்கள். அப்படியே கொண்டுவந்தாலும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டுகூட விழாது. ஏன் என்கிற காரணத்தைச் சொல்ல அவசியமில்லை.

  • 452
  • More
Comments (0)
Login or Join to comment.