·   ·  566 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 2.10.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் முடிவுகளில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான விமர்சனங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கடகம்

கணவன் மனைவிக்கிடைய ஒற்றுமை அதிகரிக்கும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

எதிர்பார்த்து சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டாகும். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அதிரடியான செயல்கள் மூலம் மாற்றம் பிறக்கும். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பணி சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி உண்டாகும். பெரியோர் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்ப பிரச்னைகளில் பொறுமையை கையாளவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

துலாம்

கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். கடனை அடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

தந்தை வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பதில் விவேகம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

 

மகரம்

விமர்சன பேச்சுக்கள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களை குறை சொல்வதைக் தவிர்க்கவும். கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

சிந்தனைகளின் புதிய தெளிவுகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளை முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 710
  • More
Comments (0)
Login or Join to comment.