·   ·  509 posts
  •  ·  0 friends

உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத ஆன்மீக தகவல்கள்

1.தினமும் காலையில் வாசலில் கோலம் போட்டு வாசபடியின் வலது பக்கம் விளக்கேற்றி வையுங்கள் வீட்டிற்கு நல்லது.(5to 6) மணிக்குள். மாலையிலும் மிகவும் நல்வது.

2.வீட்டில் காலை வேளையில் நல்ல கடவுள் தோத்திர பாடல் ஒலி நாடவை போட்டு கேளுங்கு அது வீட்டிற்கு நல்ல சக்தியை கொண்டு வரும்.

3.குழந்தைகளுக்கு சின்ன ஸ்லோகங்களை சொல்லி கொடுங்கள்.

மற்றும் குழந்தைகள் காலை குளித்தவுடன் பூஜை அறையில் நிற்க வைத்து கடவுளை வணங்க சொல்லி கொடுங்கள்.

4.குழந்தைகளுக்கு உங்கள் வழக்க படி நெற்றியில் திருமண் ஶ்ரீசூரணம்,விபூதி,குங்குமம் இட்டு கொள்ள பழக்க படுத்துங்கள்.

5.வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வீட்டிற்கு உறவினர் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று,தண்ணீர் கொடுக்க சொல்லி கொடுங்கள்.

6.வீட்டில் பெரிய பிள்ளைகள்,பெரிய பெண் குழந்தை படித்து கொண்டிருந்தால் படிப்பில் நல்ல ஞாபக சக்தியும்,நல்ல மதிப்பெண் பெறவும் வீட்டில் ஹயக்ரீவர் படம் வைத்து வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றி,நெய் தீபம் ஏற்றி வழி பட நல்ல பலன் கிடைக்கும்.

ஏலக்காய் மாலையை ஹயக்ரீவர் சன்னதி கோவிலில் இருந்தால் சாற்றலாம்.சன்னதி இல்லாதவர்கள் ஹயக்ரீவர் படம் வாங்கி வீட்டில் வைத்து மேலே குறிப்பிட்ட படி ஏலக்காய் மாலை சாற்றி வழி பட வேண்டும்.7,9,11,13 வாரங்கள் செய்யலாம்.

7.வாசலில் பசு வந்தால் அரிசி வெல்லம் கொடுத்தால் பித்ருகளுக்கு நல்லது.

8.தினமும் காலையிலும் ,மாலையிலும் விஷ்ணுசகஸ்ரநாமம்,லலிதா சகஸ்ரநாமம் சொல்ல தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரியாதவர் ஒலி நாடவை ஓட விட்டு கேளுங்கள் மிகவும் நல்லது.

9.வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.

10.பெண்கள்,பெண் குழந்தைகள் செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.

11.ஆண்கள்.ஆண் குழந்தைகள் புதன்,சனி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.

12.வெள்ளி கிழமைகளில் முடிந்தவர் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள் வாரம் தவறாமல் நல்லது.

13.பண்டிகை நாட்கள்,தை வெள்ளி,ஆடி வெள்ளி,வீட்டில் விஷேச நாட்களில் வாசலில் தவறாமல் மாவிலை கட்டுங்கள் தவறாமல் மற்றும் தலைவாசல் படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுங்கள் லஷ்மி கடாஷம் பெருகும்.

14.வருடம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு செல்லுங்கள்.

  • 910
  • More
Comments (0)
Login or Join to comment.