- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 2.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வழிமுறைகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். பழைய பொருட்களை மாற்றுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மிதுனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வாகன செலவுகள் நீங்கும். வீண் பயணம், அலைச்சல், செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் பயம், கவலைகள் வந்துபோகும். தொழில், வியாபாரத்தில் கவனமாக செயல்படுங்கள்.
சிம்மம்: வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். இழுபறியாக உள்ள வழக்கில் சாதகமான திருப்பம் வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
துலாம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவதால் வீடு களைகட்டும். பண வரவால் சேமிப்பு அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரங்கள் சுமுகமாக தீரும். வீண் அலைச்சல்கள் குறையும்.
தனுசு: உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். பிள்ளைகளால் மதிப்பு, அந்தஸ்து கூடும்.
மகரம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தரவேண்டாம். திடீர் செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீண் கோபத்தை குறையுங்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
மீனம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.