·   ·  467 posts
  •  ·  0 friends

மிஸ்டர் வேம்பு

மிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள்.

இவ்வளவு வலிமையும் வெற்றியும் இருந்தால், சிலிக்கான் வேலியில் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம். அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர் சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்?

அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்:

“இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன்.

அங்கிருந்து தான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.”

  • 411
  • More
Comments (0)
Login or Join to comment.