மேஜிக் ரைஸ் (Magic Rice)
மேஜிக் ரைஸ் (Boka Saul)
போக்கோசால் (Boka Saul) இது மேஜிக் ரைஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனை சமைக்கவே தேவை இல்லை. வெறும் தண்ணிரை உற்றினாலே போதும் இந்த அரிசி சாதமாக மாறுகிறது. இப்படி ஒரு அரிசி ரகத்தை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை தான். ஆனால் உண்மையில், இந்த வகை பாரம்பரிய அரிசியும் நாம் நாட்டில் விளைவிக்கப்பட்டு வருகிறது.
பூர்விகம்:
அஸ்சாம்நிலத்தைபூர்வீகமாககொண்டுள்ளது இந்த பாரம்பரிய அரிசி.
இந்த அரிசி புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.
இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
போக்கோசால் அரிசியின் சிறப்புகள்:
போக்கோசால்ரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
இந்த அரிசியில் ஆறிய தண்ணீரை உற்றினால் சாதாரண ஆறிய சாதமாகவும், வெந்நீரை ஊற்றினால் சூடான சாதமும் தயாராகி விடும்
இது நாம் சமைத்து உண்ணும் அரிசி போலவே இருக்கும்.
சமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்
சத்துகள்:
இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதாகவும். மேலும் 10.73 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 6.8 சதவீதம் புரதம் இருப்பதாக இந்திய வேளாண் ஆரய்ச்சிக் கழகம் கூறி உள்ளது.