- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 2.10.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர் கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: திட்டமிட்ட வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர். மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கடகம்: நீண்டநாட்களாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். தாயார், மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
சிம்மம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கன்னி: குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். இதுவரை உதாசீனப்படுத்திய உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை நினைத்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
விருச்சிகம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர். பணிச்சுமை, எதிர்பாராத பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
தனுசு: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகன பராமரிப்பு செலவு இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி சூழல் நிலவும். பணவரவு திருப்தி தரும். அலுவல கத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும்.
கும்பம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.
மீனம்: நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வெளியூருக்கு மாற்றல் கிட்டும்.