·   ·  140 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 20.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் இருந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

ரிஷபம்

பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்களை கைகூடும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

மிதுனம்

சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கடகம்

எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் முயற்சிகள் கைகூடும். செயல்களில் ஒருவிதமான சங்கடங்கள் தோன்றும். இறைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உயரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் உருவாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில் நுட்ப தேடல் உண்டாகும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

விருச்சிகம்

மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வு ஏற்படும். எதிலும் பொறுமை வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முகத்தில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மகரம்

வெளியூரில் உள்ள நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சொத்து வாங்குவது விற்பது எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். பயணங்களால் உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கும்பம்

சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். கலைப் பொருள்களை வாங்குவீர்கள். இறை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் சாதகமாகும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மீனம்

சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன்-மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

  • 1286
  • More
Comments (0)
Login or Join to comment.