இன்றைய ராசி பலன்கள் - 4.10.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வரவுகளில் இருந்த தாமதம் விலகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
பழைய அனுபவம் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொதுமக்கள் பணியில் ஆதரவு ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். தொழில் நுட்பம் சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் அமையும். மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். புதிய வேலை சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கடகம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் அவசரம் இன்றி செயல்படவும். சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தாய் வழி உறவுகளால் அலைச்சல் உண்டாகும். இழுபரியான சில வரவுகளை பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு பெறுவீர்கள். கலைப்பொருட்களால் சேமிப்புகள் குறையும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் அமைதி உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். வேலையாட்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
நண்பர்களுக்கிடையே புரிதல்கள் அதிகரிக்கும். முகத்தில் பொழிவுகள் மேம்படும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உண்டாகும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மற்றவர்களின் செயல்பாடுகள் பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு